ஜோதிடம் ஒரு சாரார் மட்டுமன்றி எல்லோரும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இச் செயலிளை வழக்கின்றோம் . குறைந்தளவு கல்வி அறிவு உள்ளவர்களும், வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை வழக்கின்றோம். இந்தப்பாடங்களை மிக எளிய தமிழில் கதை சொல்வதுபோல் இருக்கும்.
1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க வேண்டும்.
2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.
3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக அவசியம். அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச் சொல்லமுடியும்.
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல முடியும். அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து | நாம் பலன் சொல்ல முடியும். புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம் வகிப்பவர். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான சிந்தனைக்கும், அறிவு பூர்வமான சிந்தனைக்கும் வழிவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல | உதவுவார். அந்த புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். அதைத் தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகிறது
"ஆட்சி நல் உச்சத்தோடே
அருள் குரு பார்வை பெற்று மாட்சிமை உடைய வாக்கில்
மாபுதன் நிற்பாரேயாகில் சூட்சும புத்தி யோடே
சோதிடக் கலைகள் கற்றே பேச்சினில் ஞானம் சொட்டும்
பெரும் புகழ் சோதிடன் காண்"
தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..
ஏமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.
தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய.
சமர்ப்பணம் - 'ஜோதிடரத்னம் ' S.சந்திரசேகரன்
Hindu Devotioanl Store is an online pooja store, which is the one-stop...
The Sri Rudram occurs in Krishna Yajur Veda in the Taithireeya Samhita...
Ayyappan is the Hindu god of growth, particularly popular in Kerala. He...
அகத்தியர் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால்...
A naiyandi melam is a type of percussion instrument that is unique...
Naivedya is a Sanskrit word meaning 'offering to God' in the stricter...
Created with AppPage.net
Similar Apps - visible in preview.