ஆயிரத்தொரு இரவுகள் என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளை, மொழிபெயர்த்து, தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, யேமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள்[1], பாரசீக இலக்கியங்கள், பழங்கால எகிப்திய இலக்கியங்கள், மெசொப்பொத்தேமியத் தொன்மங்கள், பண்டைச் சிரியா, சின்ன ஆசியா, கலீபாக்கள் காலத்து மத்தியகால அராபிய நாட்டார் கதைகள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இசுலாமிய பொற்கால நேரத்தில் அரபு மொழியில் தொகுக்கப்பட்டன. இந்நூலின் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ள பொதுவான அம்சம், அரசர் சாரியார் மற்றும் அவர் மனைவி செகர்சதாவினதுமான முதன்மைக் கதையாகும். ஏனைய கதைகள் இம் முதன்மைக் கதையில் இருந்தே நகர்கின்றன. சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நூலிலுள்ள கதைகளுள் பெரிதும் அறியப்பட்டவை அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத் ஆகியவையாகும்.
முதன்மைக் கதை பாரசீக அரசனையும் அவன் புதிய மனைவியையும் பற்றியது. அரசன் சாரியார், தனது முதல் மனைவி தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததை அறிந்து அவளுக்கு மரணதண்டனை விதிக்கிறான். பின்னர் எல்லாப் பெண்களுமே நன்றிகெட்டவர்கள் என அறிவிக்கிறான். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்துப் பல கன்னிகளை மணம் செய்து அடுத்த நாள் காலையில் கொன்று விடுவதை வழமையாகக் கொண்டான். நாளடைவில் அரசன் மணம் செய்வதற்குப் பெண்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அரசனுக்குப் பெண்தேடும் பொறுப்பைக் கொண்டிருந்த அமைச்சனின் மகள் தான் அரசனை மணம் செய்வதாகக் கூறினாள். தயக்கத்துடன் ஒப்புக்கொண்ட அமைச்சன் தனது மகளை அரசனுக்கு மணம் முடித்து வைத்தான். மணநாள் இரவில் செகர்சதா என்னும் அப்பெண் அரசனுக்குக் கதை சொல்லத் தொடங்கினாள். ஆனால் அக்கதையை முடிக்கவில்லை. அக்கதையின் முடிவை அறிவதற்காக அரசன் அவளைக் கொல்லாமல் வைத்திருக்க வேண்டியதாயிற்று. அடுத்த நாள் இரவும் முதல் கதையை முடித்தபின் இன்னொரு கதையைத் தொடங்கி இடையில் நிறுத்திவிட்டாள். இவ்வாறு 1001 இரவுகள் சொல்லப்பட்ட கதைகளே இந் நூலில் காணும் கதைகளாகும்.
இதிலுள்ள கதைகள் பல்வேறு விதமானவை. இவை வரலாற்றுக் கதைகள், மிகுபுனைவு கதைகள், காதல் கதைகள், துன்பியல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், கவிதைகள் எனப் பலவாறானவையாக உள்ளன. ஏராளமான கதைகள் கற்பனை மனிதர்கள், இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பதோடு, இடையிடையே உண்மையான மனிதர்கள், இடங்களைப் பற்றியவையாகவும் இருக்கின்றன.
தமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம். இது வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கதை. மேலும், 1001 அரேபியக் கதைகள் அல்லது அலிப் ஃ லைலா என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. நாங்கள் இந்தப் பயன்பாட்டில் அனைத்துக் கதைகளையுமே பெரும்பாலும் கொடுத்து உள்ளோம். அதிலும், இதில் வரும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதையும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மிகவும் பிரசித்தி பெற்றக் கதைகள் ஆகும்.
Enjoy the Reading.
App Feature:
* Can read this book Offline. No internet required.
* Easy Navigation between Chapters.
* Adjust font size.
* Customised Background.
* Easy to Rate & Review.
* Easy to share App.
* Options to find more books.
* Easy to use.
குறிப்பு: நல்ல இலக்கியம்/புத்தகம்/கதை எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகின்றோம். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.
To Kill a Mockingbird, a thriller, southern Gothic, domestic Fiction novel by...
Cien años de soledad is a Magical Realism, High fantasy, Family saga,...
The Brothers Karamazov (Russian: Братья Карамазовы, Brat'ya Karamazovy), also translated as The...
The Massarenes: A Novel"Mouse," said her husband to Lady Kenilworth, one morning...
My Life (Volume 1 & 2) by Richard Wagner. Volume 1 contains...
You Can't Win is an autobiography by burglar and hobo Jack Black,...
Created with AppPage.net
Similar Apps - visible in preview.